Sunday, March 22, 2009

ஈழமும் இந்தியாவின் நிலைப்பாடும்!



கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முடிவே இல்லையா? ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு சாபமா?.அவர்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட போவதில்லையா?. இப்படி தினமும் பல கேள்விகள் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்யலாம்?. வேறென்ன நம்மால் செய்ய முடியும்?. இந்த அகதி என்ற சொல்லை நாம் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். அந்த சொல்லை சொன்னாலே மனதில் ஒருவித தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. அது உணர்ச்சி உள்ள மனிதர்களுக்கு புரியும். இந்த ஈழத்தமிழர்களின் பிரச்சனை எப்போதோ முடிவுக்கு வந்திருக்க வேண்டிய விஷயம். இந்தியா நினைத்திருந்தால்.

ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு உணர்ச்சியுள்ள மனிதனின் மனதில் ஒருவித தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இலங்கை ராணுவ தளபதி "இந்தியா உதவாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்த அளவுக்கு புலிகளை வென்றிருக்க முடியாது" என்கிறார். இந்தியா சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளாகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளில் நாம் பல போர்களை சந்தித்துவிட்டோம். பாகிஸ்தானுடன் நான்கு போர்களையும் (1947, 1965, 1971, 1999) சீனாவுடன் ஒரு போரையும் (1962) சந்தித்து விட்டோம். ஆனால் இந்த போர்களிலெல்லாம் இலங்கை அரசின் நிலைப்பாடு எப்படி இருந்தது. இந்தியாவுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நிலைமை இப்படி இருந்தும் இந்தியா ஏன் இலங்கைக்கு ராணுவ உதவிகள் அளிக்கிறது?. அதற்கும் சில அரசியல் காரணங்கள் (ராஜதந்திரம் என்று சொல்வார்கள்) இருக்கிறது. அதனை கீழே பார்ப்போம்.

இந்தியாவுக்கு இருபக்கமும் ராணுவ எதிரிகள் (சீனா, பாகிஸ்தான்) இருக்கிறார்கள். இந்தியாவை எப்போது அழிக்கலாம் என்று காத்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு கீழே இலங்கை இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் பிறகு அவர்களும் (இலங்கை) நமக்கு எதிரியாகிவிடுவர். அப்புறம் கேட்க தேவையில்லை. இந்தியாவைச் சுற்றி எதிரிகள் என்ற நிலைமை வந்துவிடும். இப்போதே சீனா இலங்கையுடன் பாசத்துடன் நடந்து கொள்கிறது. பிறகு ஏதாவது ஆபத்து காலத்தில் (போர் வந்தால்) இலங்கை சீனாவுக்கு ஆதரவாக செயல்படும். பாகிஸ்தானைப் பற்றி கேட்கத் தேவையில்லை. எப்போது இந்தியாவை போட்டு தள்ளலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நமுக்கு பெரும் இடியாக வந்து விடும். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத நிலைமை வந்துவிடும். ஆனால் இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளதும். இனியும் அப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிப் பழகுகிறது. நம் எதிரிகளுடன் போர் வந்தால் அமெரிக்கா நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால். இது வரவேற்க படவேண்டிய விஷயம் தான். ஆனால் அமெரிக்க அரசின் நம்பத்தன்மை எந்த அளவு இருக்கும் என்பதை இந்தியா இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முற்சிக்க வேண்டும். அது இந்தியாவுக்கு நல்லது. நாம் மற்றவர்களை நம்பி பிழைக்க வேண்டிய நிலைமை இருக்க கூடாது. அதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும்.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்தியா இலங்கைக்கு எவ்வளவோ ராணுவ உதவிகள் அளித்தும் இலங்கை அரசு நமக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் விடுதலை புலிகள் அப்படியல்ல. அவர்கள் எப்போதுமே இந்தியாவுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள விரும்புபவர்கள். இலங்கை மாதிரி சந்தர்ப்பவாதிகள் அல்ல. இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பவர்கள். ஆனால் மற்ற நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக (ஈழத்தமிழர்கள்) அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அதனை விட்டுவிட்டு இந்தியா ஈழத்தமிழர்களின் நலனுக்கு ஆதரவாக செயல்படலாம். விடுதலை புலிகளுக்கும் இலங்கைக்கும் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கி வைக்க இந்தியாவால் முடியும். முதலில் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கத்திலிருந்து நீக்கி அவர்களைப் போராளிகளாக அங்கீகரிக்க வேண்டும். அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும். தமிழர்கள் இலங்கையில் நிம்மதியாக வாழவேண்டும். ஒவ்வொரு தமிழனின் விருப்பமும் இதுதான். இதில் மாற்று கருத்து இல்லை. அப்படி மாற்று கருத்து இருந்தால் அவன் தமிழன் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவானால் அவர்கள் எந்த நமக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் நம் ரத்தங்கள். நம் சகோதரர்கள். அவர்கள் அங்கே தினமும் மடிந்து கொண்டு இருக்கும் வேளையில் இங்கே நாம் நிம்மதியாக இருப்பது இவர்களின் சாவை நாம் ரசிப்பது போலாகிவிடும். அது நமக்கு தீராசாபம். அது நம்மை சும்மாவிடாது.

பின்குறிப்பு:

ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். எந்த காலத்திலும் இலங்கை விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. ரஜினிகாந்த் சொன்னது போல கடந்த முப்பது வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதுவரைக்கும் ஒன்றும் பிடுங்க முடியாதவர்கள் இனியும் ஒன்றும் பிடுங்க முடியாது. ஈழம் அமைந்தே தீரும். இது உறுதி.

8 comments:

Venkatesan P said...

Hi OrLaNd, Thanks for your wishes. I have seen ur blogs. its nice too. Keep up your work.

ttpian said...

யார் சொன்னது தமிழ் நாட்டில் நடிகர்களுக்கும் கோமாளிகளுக்கும் பஞ்சம்?
உண்மையில் நாம் தான் ஏமாலிகள்?

Venkatesan P said...

Hi ttpian, what r u saying?. Its something unrelated to my topic........

ttpian said...

சின்கல ரானுவம் தமிழனின் மயிரை கூட பிடுஙக முடியாது;
உள்ளே வந்தவன் "பெட்டியில் தான் போவான்".....

ttpian said...

வென்கடேசன் மன்னிக்கவும்.....உணர்ச்சி வசப்பட்டு எழுதி விட்டேன்!
தமிழன்......

Venkatesan P said...

ஹாய் ttpian, உண்மைக்கு எதற்கு மன்னிப்பு. மனிதனுக்கு உணர்ச்சிகள் வேண்டும். அந்த உணர்ச்சி நல்ல விஷயத்திற்காக இருக்கும் பட்சத்தில் கவலையில்லை. உமது உணர்ச்சியைப் போல. மிக்க நன்றி.

ttpian said...

ஈழம் காரனமாக நான் இதே வேலயை செய்து கொண்டு இருக்கிறேன்.
காரைக்காலில் இருந்து.....இப்படி...னான் ஒருவன் எழுதி என்ன பயன்?
கிழமும்+மாமியும் தமிழ்னாட்டை கொள்ளை அடிக்கிற்றர்கள்

ttpian said...

உலகத்தின் 5 ஆம் படை(சொறி/சிரங்கு)இருந்தும் ஒன்றும் புடுங்கமுடியாதா?