Wednesday, March 4, 2009

பொல்லாதவன் பாடல்கள்மின்னல்கள்
கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
ஐயோ பைத்தியமே பிடித்ததடி

முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உரையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் படித்தது தூக்கத்திலே
காலை தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறி
தலைகீழாக தொங்கிடுமே
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
ஐயோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதற்றத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஒ ....... குட்டிப்பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போலே
ஏனிந்த தொல்லை என்று தள்ளிப் போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய்போலே

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
ஐயோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
ஐயோ பைத்தியமே பிடித்ததடா
--------------------------------------------*----------------------------------------------


படிச்சி பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சி பார்த்தேன் ஏறிடிச்சி
படிச்சி பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சி பார்த்தேன் ஏறிடிச்சி
சிரிச்சி பார்த்தேன் சிக்கவில்ல
மொறச்சி பார்த்தேன் சிக்கிடிச்சி
நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ் எம் எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப் பையன்னு பேரெடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்
அப்பா காசில் பீரடிப்போம்
எஸ் எம் எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப் பையன்னு பேரெடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்ல
அழக ரசிக்கலன்னா அவன்தான் மனுசனில்ல (படிச்சி)

கல்யாணந்தான் செய்யும் போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே
காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா
ரெண்டு விரலில் சிகரெட்ட வச்சு இழுக்கும் போது தீப்பந்தம்
பழைய சோத்த பொதச்சி வச்சு பருகும் போது ஆனந்தம்
கனவு இல்ல கவலை இல்ல
இவன போல எவனும் இல்ல

இந்த வயசு போனா வேற வயசு இல்ல
அழக ரசிக்கலன்னா அவன்தான் மனுசனில்ல

என்னடி என்னடி முனியம்மா
கண்ணுல மையீ முனியம்மா
யார் வச்ச மையீ முனியம்மா
நான் வச்ச மையீ முனியம்மா

பட்டுசேல கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால
ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணால
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற நடனமாட போறேண்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா மச்சான் கூட ஆடேன்டா
புடிச்சி ஆடு முடிச்சி ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சி போடு

இந்த வயசு போன வேற வயசு இல்ல
அழக ரசிக்கலனா அவன்தான் மனுசனில்ல (படிச்சி)
----------------------------------------*------------------------------------


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாலென்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தாலென்ன
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே (வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன்னழகைப் பாட
கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

எந்தன் மனதைக் கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச்செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ ?.... (வெண்மேகம்)

No comments: