Friday, February 27, 2009

விஜய் ஜோக்ஸ்!


முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,

இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே!!!
------------------------------------------*-----------------------------------------

ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.

படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.

"கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"

-----------------------------------------------*------------------------------------------------

பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல?

அம்மா : கெட்ட செய்திய சொல்லு

பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு

அம்மா : அப்ப நல்ல செய்தி?

பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல!!!

--------------------------------------*--------------------------------------------

மைதானத்தில் விஜய் தோனியிடம்...

விஜய் :- சாரி தோனி.... எனக்கு இங்கிலீஷ் தெரியாது

தோனி :- சாரி... எனக்கு நீ யாருனே தெரியாது!!!

---------------------------------------*-------------------------------------------

விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?

பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

-------------------------------------------*------------------------------------------------

பகல் கனவு!


என் அறையின் கதவு
தட்டப்படும் சமயங்களில்
ஆவலுடன் திறந்து பார்ப்பேன்
அவள் வருவாளா என்று.....

அன்றும் அப்படித்தான்
''டக்'' ''டக்'' என்ற சத்தம்
ஆவலுடன் திறந்து பார்த்தேன் - கதவை
என்ன ஆச்சர்யம்!
அவளேதான்! நின்று கொண்டிருந்தாள் நாணலுடன்

கதவை அகலமாய் திறந்தேன்
அவள் அறைக்கு உள்ளே வந்தாள்
அமைதியாய் அமர்ந்தாள்
நீண்ட நேரம் பேசினோம்.....

திடீரென்று முத்தம் தந்தேன் - அவள் செவ்விதழில்
அவள் மறுக்கவில்லை
கண் மூடினால் வெட்கத்தில்
கண் விழித்தேன் நான்
கனவாய் இருந்தது!
பகல் கனவு...!

Thursday, February 26, 2009

கண்ணதாசன் திரைப்பட பாடல்கள்....


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)
-------------------*----------------------

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
----------------------*----------------------

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
--------------*-------------

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி (உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை (உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும் (உள்ளம் என்பது)
-----------------*--------------------


போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா.

Wednesday, February 25, 2009

Power of Words!!!


A group of frogs were traveling through the woods, and two of them fell into a deep pit. All the other frogs gathered around the pit. When they saw how deep the pit was, they told the two frogs that they were as good as dead.

The two frogs ignored the comments and tried to jump up out of the pit with all of their might. The other frogs kept telling them to stop, that they were as good as dead. Finally, one of the frogs took heed to what the other frogs were saying and gave up. He fell down and died.

The other frog continued to jump as hard as he could. Once again, the crowd of frogs yelled at him to stop the pain and just die. He jumped even harder and finally made it out. When he got out, the other frogs said, "Did you not hear us?" The frog explained to them that he was deaf. He thought they were encouraging him the entire time.

This story teaches two lessons:
1. There is power of life and death in the tongue. An encouraging word to someone who is down can lift them up and help them make it through the day.
2. A destructive word to someone who is down can be what it takes to kill them. Be careful of what you say. Speak life to those who cross your path.

The power of words....it is sometimes hard to understand that an encouraging word can go such a long way. Anyone can speak words that tend to rob another of the spirit to continue in difficult times!

பிறந்த நாள் பரிசு!


என்னவளுக்கு பிறந்த நாள்
என்ன பரிசு கொடுக்கலாம்?
பூச்செண்டு! - இல்லை
அவளிடம் அது இருக்கிறது
இனிப்பு! - இல்லை
அதுவும் அவளிடம் இருக்கிறது
முத்தம்! - கொடுக்கலாம்
அவள் சம்மதிப்பாளா?

Tuesday, February 24, 2009

ஈரநிலத்தின் இரவுப் பாடல்...


கனவொன்று கண்டேன்
தோழி-நான்
கனவொன்று கண்டேன்!

கடற்கரை மணலில்
கால் பதித்து
அலையதை அழிக்காமல்
நான் பார்த்து நிற்க-நீ
அழகழகாய் வைத்து
நடந்த உந்தன்
பாதச் சுவடுகளை,

மாலைச் சூரியனின்
மயக்கும் விழிப் பார்வைக்குள்
இரவுப் போர்வை
நெருங்கும் போது
நிலவுக்கும் இரவுக்கும் சண்டையாம்,
நீ நிற்கும் போது
நிலவு வர வெட்கமாம்!

பாதத்தில் ஒட்டியிருந்த
கடற்கரை மணலை
கடல் நீரில்
கழுவி நீ வந்த போது
கடல் குளித்தெழுந்த
நிலவொன்றை நேரில் கண்டேன்-அதை
உன்னிடமும் சொன்னேன்,

அசடு வழிகிறது
ஆபத்து எனக்கென்றாய்,
கடலலைகள் கைதட்டிச் சிரித்தது, அதில்
ஒரு அலை மேலெழுந்து
உன்னைப் பார்த்துக் கொண்டது,

சரி, ஏதோ முக்கியமான
விடயம் பேச வேண்டும் என்றாயே!
நான் பேச வேண்டிய விடயங்கள்
உன்னைக் கண்டாலே
மறந்து விடுகின்றன என்பது
உனக்கு புரியுமா?

இருள் சூழ்ந்து விட்டது
இனியும் நிற்க முடியாது-நீ
கூறிக் கொண்டே வந்தாய்
நானும் ஆமோதித்தேன்

சில...
வெள்ளாப்பு பூச்சிகள்
என்னைக் கிள்ளி
உன் காதலைச் சொல் என்றது
அதை அடித்துப் புதைத்து விட,

என்ன? என்றாய்
குற்றுயிராய் கிடந்த
வெள்ளாப்புப் பூச்சி
மீண்டும்,
அதை காலால் நசுக்கி விட்டு
ஒன்றுமில்லை என்றேன்,

சரி, நடப்போம்
நடந்து கொண்டே
கேட்டேன்
நாளைக்கும் வருவோமா?

சிரித்துக் கொண்டே
ஒரு வாரமாக
இதுதானே நடக்குதென்றாய்,

மௌன இடைவெளிக்குப் பின்
வருகிறேன் என்றாய்

முட்டை உடைந்து
குஞ்சு வெளி வரும்
வேளை வந்தது!

நாளைக்காவது சொல்வானா
என்ற ஏக்கம்
அவளிடம்?

அவள் ஞாபங்களோடே...
கடற்கரை நோக்கி
நான்...
சென்று கொண்டிருந்தேன்!

ஒரு பெரும்
சுனாமியின்
பேரழிவின் பின்புதான்
புரிந்தது எனக்கு!

அவளை நான்
கடலுக்கு அறிமுகம்
செய்தது தவறென்று!

கவிஞர் அல்லையூர் சி.விஜயன்

மறதி


மறந்தேன்
என நினைத்தேன்
உன்னை நினைப்பதை
மறந்து விட்டே.....

என்ன நடக்கிறது?!

சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டுக்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும் குழந்தைகள் அங்கே!
இறந்த பின்னே கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே!
மரங்கள் வெட்டுண்டாலே மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே!

Monday, February 23, 2009

மொழி


அன்புக்குரியவனே!

என்றேனும் உன் மொழிக்கும் உனக்குமுள்ள உறவைப் பற்றிச்
சிறிது நேரமாவது சிந்தித்திருக்கிறாயா?

உடம்பை உயிர் இயக்குவது மாதிரி, நம் நடைமுறை
வாழ்க்கையை
மொழிதான் இயக்குகிறது என்ற உண்மையை
ஒரு போதேனும்
நீ உணர்ந்திருக்கிறாயா?

என்னதான் அறிவைத் துருவித் துருவிப் பார்த்தாலும் மொழி ஒரு கருவிதான் என்று அத்தனை எளிதாக அதைத் தள்ளி
வைத்துவிட முடியாது

ஏனென்றால் தொட்டில் முதல் பாடை வரைக்கும் மொழி நமது சமுதாய வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதனின் பிறப்பைப் போலவே அவனது தாய்
மொழியும் தற்செயலானது என்பது ஒப்புக்கொள்ளப்பட
வேண்டிய உண்மையே.

ஆனால் பிறந்த பிறகு ஒரு மனிதன் தன்னைத்தானே நேசிப்பது மாதிரி தன் தாய்மொழியையும் நேசிப்பதே நியாயம் என்றே
வாழ்நாள் முழுவதும் நான் வலியுறுத்திக் கொண்டிருப்பேன்.

ஏனென்றால், உணவு, ஒரு மனிதனின் சதையை வளர்க்கிறது;
மொழி ஒரு மனிதனின் அறிவை வளர்க்கிறது.

அறிவை மொழிதான் கற்றுத் தருகிறது.

அந்த அறிவுதான் ஒருவனுக்கு மனிதன் என்ற மரியாதையைப்
பெற்றுத் தருகிறது.

எனவே மொழிக்கு நீ காட்டும் நன்றிதான் - மொழிப்பற்று.

நாம் மொழிப்பற்றோடு இருக்க வேண்டும் என்று முழங்கிக்
கொண்டிருப்பதே நாம் நன்றியற்றவர்களாக இருக்கிறோம்
என்பதை நாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நான் தமிழ்தான் மொழிப்பற்று என்று சொல்லவில்லை.

தாய்மொழியாக எந்த மொழியைக் கொண்டவரும் அந்த
மொழியை நேசிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

மொழிதான் ஞானம்; மொழிப்பற்று என்பது மானம்.

சென்னை மத்திய சிறைச்சாலை
சென்னையின் பழமை வாய்ந்த கட்டிடங்களுள் ஒன்றான மத்திய சிறைச்சாலை நேற்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
சென்னை மத்திய சிறைச்சாலையின் சில இடங்கள் இங்கே புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர்.


உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கர் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருட ஆஸ்கர் விழாவை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்தது. முக்கியமாக நமது தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என்று இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் ( சிறந்த இசை), சிறந்த ஒரிஜினல் சாங் ( சிறந்த பாடலுக்காகவும் ஜெய் ஹோ) விருது அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதை பெற்ற ரகுமான் வெற்றி‌யை தனது தாய்க்கு சமர்ப்பித்தாக தெரிவித்தார். எல்லா புகழும் இறைவனுக்கே என்று ஆஸ்கர் விருதுகள் வழங்கும் பிரம்மாண்ட அரங்கில் தமிழில் தெரிவித்தார்.

ஸ்லம்
டாக் மில்லியனர் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. படத்தின் திரைக்கதை அமைப்பாளர் சிமோன் பியூபோய் படத்தின் திரைக்கதைக்கான விருதை பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதை ரேசுல் பூக்குட்டி பெற்றுள்ளார். இவருன் , இயன் டாப் மற்றும் ரிச்சர்ட் பையர்க்கும் சவுண்ட் மிக்சி்ங்குக்காக விருதை பெற்றுள்ளனர். சிறந்த எடிட்டிங்குக்கான விருதையும் ஸ்லம்டாக் மில்லியனர் படம் தட்டி சென்றுள்ளது.


இதன் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெரும் முதல் இந்தியர் (தமிழர்) என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார். ஏ. ஆர் ரஹ்மானை தனக்கு சிறிய வயதிலிருந்தே தெரியுமென்றும், அவர் விருது பெற்றது தானே விருது பெற்றது போல இருக்கிறது என்று பாடகர் எஸ். பீ. பி. பாலசுப்பிரமணியன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஆஸ்கர் விருதுகள் பெற்று நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ள நம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாடு முழுவதிலிமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை இயக்கிய டேனி பாயில் வென்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.

Sunday, February 22, 2009

ஆஸ்கர் விருதுகள்


உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்னும் சில மணிநேரங்களில் நடைபெற இருக்கிறது. ஒரு இந்தியனாக ஒவ்வொரு வருடமும் இந்த விழாவை நாம் அவ்வளாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் இந்த வருடம் நாம் இந்த விழாவை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். அதற்கு காரணம் நம் இந்திய (தமிழக) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இந்த வருடம் வெளிவந்திருக்கும் (ஸ்லம்டாக் மில்லினைர்) என்ற ஆங்கில படம்.

படம் தான் ஆங்கில படமே தவிர இதில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் இந்தியர்களே. இந்த படம் பத்து பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரிவில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் எதாவது ஒரு பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவருக்கு விருது கிடைத்தால் அது அவருக்கான உலக அங்கீகாரமாக இருக்கும்.

நம்
இந்திய மக்களுக்கு அவருடைய திறமையைப் பற்றி நன்கு தெரியும். நம்முடைய உலகநாயகன் கமல்ஹாசன் சொன்னது போல ஆஸ்கர் விருது என்பது இந்திய தேசிய விருது போலத்தான். அதனால் விருது கிடைக்கவில்லையென்றால் அதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. எது எப்படியோ நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நம்முடைய மனதார வாழ்த்துக்கள்.

மாபெரும் ஒன்றுகூடல்

Saturday, February 21, 2009

தபூ சங்கர் கவிதை


நட்சத்திர மீனை எத்தனை துண்டுகளாக
வெட்டினாலும்
ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு நட்சத்திர மீனாக
வளர்ந்துவிடுகிறது

எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருந்தால்
என்னை நானே
துண்டுத் துண்டாக வெட்டி
பத்துப் பதினைந்து பேராக வளர்ந்து
தைரியமாய் உன்னைக் காதலிக்கலாம்

ஒருத்தனாக
உன்னைக் காதலிக்க
எனக்குப் பயமாய் இருக்கிறது...

Friday, February 20, 2009

கருணாநிதியின் வேஷம்


இலங்கை பிரச்சனை எப்போது தீவிரமாக தலையெடுக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே முதல்வர் கருணாநிதிக்கு உதறல் ஆரம்பித்து விட்டது. இலங்கை பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து, அதனை சமாளிக்க வழி தெரியாமல் பயந்து கொண்டு மருத்துவமனையில் ஒளிந்து கொண்டுள்ளார். முதலில் இரண்டு வாரம் ஒய்வு என்று சொன்னார்கள். இப்போது அதை இன்னும் நான்கு வாரம் ஆக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று தெரியவில்லை. சட்டம் படிக்கும் சட்ட கல்லூரி மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுகிறார்கள். சட்டத்தை காக்க வேண்டிய வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னாடியே பெரும் கலவரத்தில் இறங்குகிறார்கள். இதையெல்லாம் தைரியமாக சமாளிக்க தெரியாத முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லை என்ற பொய்யான காரணத்தை சொல்லிக்கொண்டு மருத்துவமனையில் உறங்கிகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் இதனை தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் இதன் விளைவு கண்டிப்பாக தெரியவரும்.

எனக்குள் ஒருத்தி


எனக்குள்
என்னைத் தேடும் தருணங்களில்
முழுதாய் உன்னை
மட்டுமே காண்கின்றேன்......!

காதல் மொழி.


அனைவருக்கும் உண்டு
அவரவர் காதல் மொழி
என் காதல் மொழி
மௌனம்!

Thursday, February 19, 2009

என் உயிர்


தாயில்லாமல்
நானில்லை.....
அவளில்லாமலும்
நானில்லை!

தமிழனின் கடமை

நான் சமீபத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படித்தேன். நான் இதுவரைபடித்த நூல்களிலேயே மிக சிறந்த நூல். நூலை படிக்கும் பொழுது பல இடங்களில் அழுதேன். பேயத்தேவர் மற்றும் மொக்கராசுவின் பாத்திர படைப்பு மிக அருமை. ஒரு நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து அதே நாட்டில் உள்ள வேறொரு கிராமத்திற்கு புலம் பெயரும் மனிதர்களின் மனநிலையை மிக உருக்கமாக விளக்குகிறார். உள்நாட்டிலேயே புலம் பெயரும் மனிதர்களின் மனநிலையேஅவ்வளவு கடினமானதாக இருக்குமானால் நாடு விட்டு நாடு புலம் பெயரும் மனிதர்களின் மனநிலை எவ்வளவு கடினமானதாக இருக்க வேண்டும். நெஞ்சில் நேசம் இருக்கிற அனைவருக்கும் அந்த வலி புரியும்.

இலங்கையில் நடக்கின்ற கொடுமையை பார்க்கின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் நாடு விட்டு நாடு புலம் பெயரும் ஈழ தமிழனின் வலி புரிய வேண்டும். அந்த வலியை புரிநது கொள்ள முடியாதவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன். ஏன் மனிதனாக இருக்கவே தகுதியற்றவன். ஒவ்வொரு தமிழனும் மற்றவர்களின் கஷ்டங்களை புரிநது கொண்டு அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். இதை உங்கள் கடமை என்று நீங்கள் உணர வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ஈழ தமிழனும் நம் சகோதரன்.

கள்ளிகாட்டு இதிகாசத்தை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு ஈழ தமிழனின் மனநிலை நமக்கு இன்னும் ஆழமாக புரிய வரும். நூலின் விலை நூற்று பத்து ரூபாய் தான்.

வில்லு திரைவிமர்சனம்


விஜயிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, ஒரு டைரக்டர் ஒரு படம்ஹிட் கொடுத்துட்டா அதே டைரக்டர் கிட்ட இன்னொரு படம் பண்றதுதான். அதேபாணியில் டைரக்டர் பிரபுதேவா எடுத்து ஹிட் ஆன போக்கிரி படத்தைதொடர்ந்து அதே டைரக்டர் கூட வில்லு படம் பண்ணதுதான். விஜய் ஒன்றைதெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே மசாலா படங்கள்பண்ணுவதை தவிர்த்து அவ்வப்போது சில நல்ல மக்கள் விரும்பும் படங்களைபண்ணலாம். நயன்தாரா வருகிறார் போகிறார். போக்கிரியில் எந்த அளவு காமெடிஹிட் ஆனதோ அந்த அளவு வில்லுவில் காமெடி என்னும் பெயரில் வடிவேலுசெம மொக்க போடுகிறார். தாங்க முடியிலடா சாமி.

மொத்தத்தில் வில்லு- சொத்த பல்லு.