Saturday, March 7, 2009

உண்மைத் தமிழனின் கடமை!


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. இது கௌண்டமணி ஒரு தமிழ்ப்படத்தில் சொல்லும் பிரபலமான வசனம். காலங்காலமாக நம் அரசியல்(சாக்கடை) வாதிகள் நெறி தவறாமல் இந்த வசனத்தின் உண்மையை பின்பற்றி வந்தாலும் தற்போது எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் செல்வி ஜெயலலிதா ஒரு அறிக்கைவிட்டுள்ளார். மார்ச் ஒன்பதாம் தேதி இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறாராம். என்னே ஜெயலலிதாவின் இலங்கைத் தமிழர்களின் மீதான (அரசியல்) பற்று.






















சில வாரங்களுக்கு முன்பு இதே ஜெயலலிதா இலங்கை ராணுவத்திற்கு இலங்கைத் தமிழர்களை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், போர் என்றால் இலங்கைத் தமிழர்கள் மடியத்தான் செய்வார்கள் என்றும் சொன்னார். இப்போது இதே ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்பது ஒவ்வொரு உண்மைத் தமிழனுக்கும் தெரிந்திருக்கும். எங்கே இப்போது நாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் மக்களின் கோபம் தேர்தல் நேரத்தில் தன் கட்சிக்கு எதிராக திரும்பிவிடுமோ என்ற பயத்தில் உண்ணாவிரதம் என்னும் அரசியல் கபட நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறார்.
















நம்
அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் வேலையை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். மக்களும் இன்றுவரை ஏமாளிகலாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தானே இன்றுவரை தமிழகத்திலுள்ள இரண்டு திராவிட கட்சிகளுமே தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றன. ஒரு தேர்தலிலாவது மக்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இன்று இலங்கைத் தமிழன் இலங்கையில் கொடுங்கோலன் ராஜபக்சேவின் அகோர பசிக்கு இரையாயிருப்பானா?.

வரும் தேர்தலிலும் மக்கள் இதே இரண்டு கட்சிகளுக்கும் தான் மாறி மாறி ஒட்டு போடுவார்கள். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்கள் சாகத்தான் வேண்டும் என்று சொல்வார். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்கள் மீது (அரசியல்) பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்வார். நம்முடைய வைகோ அவர்களோ இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அன்பு இருப்பதாகக் காட்டிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவிடம் தஞ்சமடைவார். என்னே நம் அரசியல் (சாக்கடை) வாதிகளின் இலங்கைத் தமிழர்களின் மீதான பற்று.


நம் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று அவருக்கே புரியவில்லை. இலங்கை பிரச்சனையில் நீண்ட நாட்களாக மௌனம் காத்தவர் மக்களின் கோபம் எங்கே தன் மேல் திரும்பிவிடுமோ என்று பயந்து சில நாட்களுக்கு முன்பு (அரசியல்) போராட்டம் நடத்தினார். நம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசைப் பற்றி சொன்னால் வெட்கக் கேடு.

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது வரும் என்று இலங்கைத் தமிழனின் மீது உண்மையான பற்றுள்ள ஒவ்வொரு தமிழனும் உள்ளுக்குள் அழுது புழுங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் உண்மையான தமிழன் ஒவ்வொருவனையும் ஒரு உண்மையான தமிழன் என்ற முறையில் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் யாரும் ஒட்டு போடாதீர்கள். தேர்தல் முடிந்ததும் எத்தனை சதவீதம் உண்மையான தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

No comments: