Monday, March 2, 2009

ஆலயமணி பாடல்கள்


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா (சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா - (பாதி)
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா (சட்டி)

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்மதேவன் கோயிலிலே ஒளிதுலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா (சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா - (எறும்புத்)
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா (சட்டி)
--------------------------------------*------------------------------------------


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே (பொன்னை)

ஆயிரம் மலரில் ஒருமலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே (ஆயிரம்)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே (பொன்னை)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (பறந்து)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே (பொன்னை)

ஆலமரத்தின் விழுதினைப்போலே
அனைத்து நீயும் உறவு தந்தாயே (ஆலமரத்தின்)
வாழைக்கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே - (பொன்னை)
------------------------------------*---------------------------------

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
களையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2) - (கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா -
வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா
மின்னல் இடையல்லவா - (கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
(கல்லெல்லாம்)

No comments: