Wednesday, June 24, 2009

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்


குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா

வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..

ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..

Tuesday, June 23, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும் ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.

‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.
தாமரை: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!..........

பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Wednesday, June 17, 2009

தோல்வி!


என் காதல்
முடியட்டும் தோல்வியில்
பிரிவு.........
என்னை அவள் மிக அருகாமையில்
அழைத்து செல்கிறது.

Tuesday, June 9, 2009

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்...


வணக்கத்திற்குரிய வாசகர்களே,

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் பதிவு எழுத தோன்றியது. என்னையும் ஒரு பதிவாளனாக கருதி என் பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் என் நன்றி. நான் ஒரு புத்தகம் எழுதும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் என்னால் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பதிவெழுத முடிவதில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனி பதிவு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியிட்ட என் பதிவைப் (புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையா?) பார்த்து ஒரு வாசகர், அந்த பதிவு தன்னையும் எழுத தூண்டியதாக கூறியதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படி என்னுடைய எழுத்தும் ஒருவருக்கு உபயோகமாக இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். கண்டிப்பாக மிக அதிகமான நண்பர்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே போல அவர்களுக்கு கலையார்வமும் கண்டிப்பாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். காரணம், வலையில் பதிவு எழுத நேரம் ஒதுக்கும் உங்களால் கண்டிப்பாக அதன் அனுபவத்திலிருந்து ஒரு புத்தகம் எழுத முடியும் என்று எண்ணுகிறேன். அது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் கருத்து.

ஆல் தி பெஸ்ட்....