Monday, March 2, 2009

பாலும் பழமும் பாடல்கள்








என்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழியல்லவா (என்னை)

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா
சருகான மலர் மீண்டும் மலராதையா
கனவான கதை மீண்டும் தொடராதையா (2)
காற்றான அவள் வாழ்வு திரும்பாதையா (என்னை)

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா (2)
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா (என்னை)

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா - அவள்
ஒளிவீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா (என்னை)
------------------------------------------*-------------------------------------------

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
- உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
- நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
- நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
- உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்
- பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
- நானாக வேண்டும்
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்
- நீயாக வேண்டும் (நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
- பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
- விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
- உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேருதும் இல்லை
- வேறேதும் இல்லை (நான் பேச)
---------------------------------------*-----------------------------------------------

பாலும் பழமும் கைகளிலேந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசி பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்ன கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனைநான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே (பாலும்)

No comments: