Wednesday, March 18, 2009

அவன்தான் மனிதன் பாடல்கள்


ஆட்டுவித்தால்
யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே-ஆனால்
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே -(ஆட்டுவித்தால்)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்-இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் -(ஆட்டுவித்தால்)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்-அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா -(ஆட்டுவித்தால்)
----------------------------------------------*------------------------------------------------

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று (மனிதன்)

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தார் (2)
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது (மனிதன்)

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் (2)
கூட்டை திறந்துவிட்டால் அந்த குருவி பறந்துவிடும்
காலில் விலங்கு இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விளங்குகையில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் (மனிதன்)

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை முடிந்ததடா (மனிதன்)

1 comment:

Unknown said...

சூப்பர் பாடல்கள்