Monday, March 9, 2009

சின்னத்தம்பி பாடல்கள்


தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட - (தூளியிலே)

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும் (பாட்டெடுத்து)
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

சோறுபோட தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுவேன்
நானழுக தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளதான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட -(தூளியிலே)
-------------------------------------*----------------------------------------

பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் காணம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் -(போவோமா)

ஆண் : அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
ஆண் : குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
பெண் : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
ஆண் : பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
பெண் : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண் : அதிசயமான பெண்தானே
பெண் : புதுசுகம் தேடி வந்தேனே - (போவோமா)

பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுகட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண் : கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியலே
பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
பெண் : போதும் போதும் ஒம் பாட்டு
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு - (போவோமா)
--------------------------------------*-----------------------------------------------

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ - (அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்கள படச்சதாறு
என்னிக்கும் வயசு மூவாறு என்சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ
பூந்தேரோ - (அரச்ச)

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்
சேலப் பூவு கோலம்போடும் ராசிதான்
பல ஜாலத்தோடு ஆடப்போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்கு பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ
பூந்தேரோ - (அரச்ச)
-----------------------------------------*---------------------------------------------

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற
அது எப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?
ஓஓஓஓஓ - (குயில)

ஆண்பிள்ள முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்?
ஒல குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா?
இது தெய்வத்தின் நிந்தனையா?
இத யாரோடு சொல்ல - (குயில)

எல்லார்க்கும் தலமேல எழுத்தொன்னு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாத
போனாலும் வந்தாலும் அதுதான்
ஏழையென் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கைநழுவி
இத யாரோடு சொல்ல - (குயில)

No comments: