Tuesday, March 17, 2009

காஞ்சீவரம் - திரைப்பார்வை






















ஆஹா! இந்த மாதிரி உலகத் தனமான சினிமாவைப் பார்த்து எத்தனை நாளாச்சு?. கமர்ஷியல் வாசனையே இல்லாத சினிமாவைப் பார்த்து எத்தனை நாளாச்சு?. எனக்குத் தெரிந்து இந்த மாதிரி தமிழ் சினிமாவை நான் இதுவரை பார்த்து கிடையாது. காஞ்சீவரம் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் சிலருக்கு பிடிக்கும். அந்த சிலர்தான் உண்மையிலேயே உண்மையான சினிமா ரசிகன். சரி கதைக்கு வருவோம்.

வேங்கடம் நம்முடைய கதையின் நாயகன் ஒரு நெசவுத் தொழிலாளி. திருட்டு வழக்கில் கைதாகி இரண்டு நாட்கள் பரோலில் உடல் நலம் குன்றி இருக்கும் தன் மகளைப் பார்க்க போலீசாருடன் பஸ்ஸில் வீடு வருகிறார். பெரும் மழை பெய்கிறது. அதனூடே வேங்கடத்தின் கடந்த கால வாழ்கையும் நம்முன்னே விரிகிறது.

தனக்கு கல்யாணம் செய்யும் பொது தன் மனைவிக்கு பட்டு புடவை உடுத்திதான் அவளுக்குத் தாலி கட்டுவேன் என்று சபதம் செய்து அது முடியாமல் போக, வெறும் கூரைப்பட்டு சேலை உடுத்தி ஊருக்கு வரும் வேங்கடத்தைப் பார்த்து ஊர் கண்டவிதமாய்ப் பேசுகிறது. பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு அவள் கல்யாணம் செய்து போகும் போது பட்டுச் சேலை உடுத்தி அனுப்புவதாக ஊர் முன்னிலையில் சொல்கிறார். ஊர் அவரைப் பார்த்து சிரிக்கிறது. அவரது மனைவிக்கும் அவரது மேல் கோபம். ஊர் அவரைப் பார்த்து சிரித்ததைப் பற்றி அவருக்கு கவலையில்லை. தன் மனைவி தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாளே என்று வருத்தம். தன் மனைவியைக் கூப்பிட்டு உண்டியலில் தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தைக் காட்டுகிறார். அதில் பட்டுச் சேலை வாங்குவதற்கு பாதி பணம் இருப்பதாகவும், மீதி பணத்தைத் தன் குழந்தையின் திருமணத்திற்குள் சேமித்து விட முடியும் என்று சொல்கிறார். அவரது மனைவிக்கு நம்பிக்கை பிறக்கிறது.












ஆனால்
மறுநாளே வேங்கடத்தின் தங்கையின் கணவர் பணம் கேட்டு நச்சரிக்க தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அவருக்குக் கொடுக்கிறார். அவரது மனைவிக்கு அதில் வருத்தம். தன் குழந்தையின் திருமணத்திற்கு சேமித்த வைத்த பணம் போய்விட்டதே என்ற சோகத்தில் தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து தினமும் பட்டு நூலைத் தன் வாயில் அடைத்து வைத்துத் திருடிகிறார். திருடி வரும் நூலை வைத்து தன் வீட்டில் இருக்கும் தறியில் பட்டு சேலையை கொஞ்சம் கொஞ்சமாக நெய்கிறார்.

இடையில் அவரது மனைவி உடல் நலம் சரியில்லாமல் இறந்து போகிறாள். வேங்கடம் கம்யூனிச கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்துகிறார். போராட்டத்தின் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டு மற்ற அனைத்தும் நிராகரிக்கப் படுகிறது. அதனால் போராட்டம் தொடர்கிறது. தன் மகளுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அதனால் அவளுக்கு பட்டு சேலையை நெய்து முடிக்கும் எண்ணத்தில் தானே போராட்டத்தை வாபஸ் பெறுகிறார். அதில் அவருடைய நண்பருக்கு கோபம். முதலாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்று நினைக்கிறார்.

மறுபடியும் வேலைக்கு செல்கிறார் வேங்கடம். மீதி பட்டு சேலை நெய்வதற்காக மீண்டும் வாயில் அடைத்துப் பட்டு நூலைத் திருடுகிறார். வாயில் அடைத்து வைத்து வீட்டுக்குத் திரும்பும்போது தன்னுடைய நண்பரால் மாட்டிக்கொள்கிறார். எல்லோரும் அவரை அடித்து உதைக்கிறார்கள். அவரது மகள் அவரை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறாள். போலீஸ் அவரைப் பிடித்துச் செல்கிறது. வேங்கடம் ஜெயிலுக்கு சென்றதும் அவரது மகள் உடல் நிலை மோசமாகிறது. தன் மகளைக் காண பரோலில் வருகிறார். தன் மகளின் உடல்நிலையை பார்த்து கண் கலங்குகிறார். தன் கையாலேயே உணவில் விஷம் கலந்து தன் மகளுக்கு ஊட்டுகிறார். மகள் இறந்தவுடன் தான் நெய்து வைத்த பட்டு சேலையை அவளது உடம்புக்கு போர்த்துகிறார். ஆனால் அவர் நெய்த பட்டு சேலையால் அவரது மகளின் பிணத்தைக் கூட மூட முடியவில்லை. மீண்டும் பிணத்தை முழுமையாக மூட முயற்சி செய்கிறார். முடியவில்லை என்று தெரிந்து விரக்தியில் சிரிக்கிறார். அந்த விரக்தியான சிரிப்போடு படம் நிறைவடைகிறது.

வேங்கடமாக பிரகாஷ்ராஜ் அருமையாக செய்திருக்கிறார். ஒரு நெசவாளியின் துயரத்தை நம் கண்முன் கொண்டு வருகிறார். இதற்கு மேல் யாரும் இந்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது. மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவியாக ஷ்ரேயா ரெட்டி நிறைவாக செய்திருக்கிறார். பிரகாஷ்ராஜின் நண்பராக வருபவர், முதலாளி, பிரகாஷ்ராஜின் மகள் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். டைரக்டர் ப்ரியதர்ஷனை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள். அவர் மேலும் இந்த மாதிரி முயற்சிகளை தொடர வேண்டும்.

பின்குறிப்பு:

நம்முடைய தமிழ் சினிமா நாயகர்கள் அஜித்தும் விஜயும் இந்த மாதிரி முயற்சிகளை எடுக்கலாமே. ஏன் அவர்கள் எல்லாம் ஒரே மசாலா படங்களாக நடிக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர்களுக்கு இருக்கும் பப்ளிசிட்டிக்கு அவர்கள் இந்த மாதிரி நல்ல கதையம்சமுள்ள, நடிப்பிற்கு தீனி போடும் படங்களையும் அவ்வப்போது செய்யலாமே. அது அவர்களுக்கு மக்கள் மத்தியில் மரியாதையை பெற்றுத் தரும். முயற்சி செய்வார்களா? அஜித்தின் மேல் எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. விஜயின் மேல் சுத்தமாக இல்லை.

6 comments:

மோனி said...

நல்ல கதை ...
படிக்கும் போதே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது .

ஆமா
நீங்களும் விஜய்-ய நம்பலைனா எப்படி ?
யாராவது ஒருத்தராவது நம்புங்கப்பா...
சைலன்ஸ் ...

ஷாஜி said...

//அஜித்தின் மேல் எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.//

thanks

Venkatesan P said...

Moni. enna kancheevaram padam paartheengala?. padam epdi irukku?. Thanks for ur views.

Venkatesan P said...

shaji, neengalum ajith (thala) fan pola. I feel he should do more good films not caring about the results of the movie.

Anonymous said...

சைலன்ஸ்... அவர் நல்ல படம் பத்தி எழுதி இருக்கார் தெரியலியா, இதுல விஜய் எங்கே வர முடியும்

Venkatesan P said...

Hi ganesh, Thanks for your comments. You r right about vijay.