Monday, March 16, 2009

யோசி மகனே யோசி! - கொஞ்சமா.


ஒரு பழக்கடைக்கு ஒருவன் சென்றான். அவன் அந்த பழக்கடை முதலாளியிடம் ஒரு பத்துரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு ஆரஞ்சு ஜூஸ் போடச் சொன்னான். உடனே அந்த முதலாளி அவனைப் பார்த்து சாதா ஜூஸ் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ஜூஸ் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அவன் சாதா ஜூஸ் போதும் என்றான். பழக்கடை முதலாளியும் அவனிடம் அவனிடம் இரண்டு ரூபாய் சில்லறை கொடுத்து விட்டு சாதா ஜூஸ் விலையான எட்டு ரூபாய்க்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டுக் கொடுத்தார். அவனும் ஜூஸ் குடித்து விட்டு சென்றுவிட்டான்.


அடுத்ததாக இன்னொருவன் அதே பழக்கடைக்கு வந்தான். அவனும் அந்த முதலாளியிடம் காசு கொடுத்து விட்டு ஆரஞ்சு ஜூஸ் ஒன்று என்றான். ஆனால் முதலாளி அவனிடம் சாதா ஜூஸ் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ஜூஸ் வேண்டுமா என்று கேட்காமல் அவனுக்கு ஸ்பெஷல் ஆரஞ்சு ஜூஸ் போட்டுக் கொடுத்தார்.


இப்போது கேள்விக்கு வருவோம். முதலில் அந்த கடைக்கு வந்தவனிடம் அந்த கடை முதலாளி உனக்கு சாதா ஜூஸ் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ஜூஸ் வேண்டுமா என்று கேட்டார். ஆனால் இரண்டாம் வந்தவனிடம் அப்படி கேட்காமல் அவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் போட்டுக் கொடுத்தார். அந்த கடை முதலாளி இருவரிடமும் ஏன் இருவேறு முறையில் நடந்து கொண்டார்?

இத்துடன் இந்த கேள்வி முடிகிறது. பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பார்க்கும் முன்பு நீங்களாகவே சற்று சிந்தித்து இதற்க்கான விடையை கண்டுபிடிக்கலாம். அப்படியும் முடியாதவர்கள் விடையைப் பார்க்க கீழே செல்லலாம்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

விடை:

முதலில் வந்தவன் அந்த முதலாளியிடம் பத்து ரூபாய் கொடுத்து ஜூஸ் வேண்டும் என்று கேட்டான். அதனால் அந்த முதலாளி அவனுக்கு ஸ்பெஷல் அல்லது சாதா ஜூஸ் வேண்டுமா என்று தெரியாமல் அவனிடம் எந்த ஜூஸ் வேண்டும் என்று கேட்டார். ஆனால் இரண்டாவதாக வந்தவன் முதலாளியிடம் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் இரு இரண்டு ரூபாய் நாணயங்களையும் மற்றும் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் கொடுத்து ஜூஸ் வேண்டும் என்று கேட்டான். அதனால் அவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் வேண்டும் என்று அறிந்து கொண்டு அவனைக் கேட்காமலேயே அவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் போட்டுக் கொடுத்தார்...

மறுபடியும் வேறொரு கேள்வியில் சந்திப்போம்.