Sunday, March 15, 2009

விஜயகாந்த் செய்ய வேண்டியது!


விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை புதிதாக ஆரம்பித்த போது, அதை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். முதலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்றார். கட்சி ஆரம்பித்த முதல் சட்டசபைத் தேர்தலில் எட்டு சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகளைப் பெற்று மற்ற கட்சிகளை வாயடைக்க வைத்தார். விருத்தாசலம் தொகுதியில் பாமகவை எதிர்த்து தானே போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பிறகு வந்த இடைத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் நிறைய வாக்குகள் பெற்றார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

வெற்றி பெற முடியவில்லை என்று தெரிந்ததும் அவர் என்ன செய்தார். தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதிக் கொடுக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்தார். பிறகு சென்னை மற்றும் பிற இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்றார். சமீபத்தில் மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தேமுதிக கட்சி தோல்வி அடைந்தது. கடந்த முறை அதே தொகுதியில் நடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளைக் காட்டியும் குறைவான வாக்குகளைப் பெற்றார். அதற்கு முக்கிய காரணம் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியின் பணபலம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று மக்கள் பணத்தை மக்களிடமே வாரி இறைத்தார்கள். மக்களும் அந்த கட்சிகளுக்கு ஒட்டு போட்டார்கள்.

இந்தியாவில் இன்னும் ஏழ்மை நிலை அதிகமாகத்தான் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் மாற்ற மாட்டார்கள். காரணம் ஒட்டு வங்கி. தமிழகத்திலும் அதுதான் நடக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றது. அவர்கள் நினைத்திருந்தால் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னணியில் கொண்டு வந்திருக்கலாம். விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் என்ன நடந்தது. அதுதான் இன்று பார்க்கிறோமே. விவசாயிகள் அவர்கள் விளைவித்த பயிர்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்ய முடியாமலும், அரசும் அந்த பயிர்களுக்கு உரிய விலையை கொடுக்காமலும் விவசாயிகளை ஒட்டு மொத்தமாக நசுக்குகின்றனர். வாழ முடியாமல் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அவலமும் இங்கு நடந்தது.

ஏழ்மை என்னும் நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கி இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை அழித்து வந்திருக்கின்றன. இந்த நிலையில் தான் இரு திராவிட காட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை ஆரம்பித்தார். சரி இவர் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை ஏழை மக்களுக்கு பிறந்தது. முதலில் மக்களுடன் கூட்டணி என்றவர் பிறகு தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்றார். இப்போது வரப்போகும் லோக்சபா தேர்தலில் அவர் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்று இன்னும் தெரியவில்லை. பத்திரிகைகள் அவர்கள் இஷ்டத்திற்கு கதைகளைக் கட்டி விடுகின்றனர். அதற்கு விஜயகாந்தும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

தான் தனித்து போட்டியிட்டால் எப்படியும் ஜெயிக்க மாட்டோம் என்று அவருக்குத் தெரியும். அதனால் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று விரைவில் அறிவிப்பேன் என்று சொல்கிறார். ஏன் அவர் முதலில் சொன்ன மாதிரி தனித்தே போட்டியிடலாமே. தோற்றால் தோற்க்கட்டுமே. அவர் கட்சி ஆரம்பித்து எத்தனை வருடங்கள் ஆகின்றது. எத்தனை சட்டசபைத் தேர்தல்களை சந்தித்திருக்கிறார். எத்தனை லோக்சபா தேர்தல்களை சந்தித்திருக்கிறார். அதற்குள் முதல்வர் ஆவேன் என்றால் எப்படி?. அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன் எப்படி அதிபரானார். தொடர்ந்து ஐம்பத்து இரண்டு முறை தேர்தல்களிலே தோற்றவர் அவர். பிறகுதான் வெற்றி பெற்றார்.

விஜயகாந்த் மட்டும் உடனே முதல்வர் ஆக வேண்டும் என்றால் எப்படி?. பொறுத்திருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். தெளிவான முடிவுகளை அவர் எடுக்க வேண்டும். அதனை மக்களுக்கு அவர் தெளிவாக உணர்த்த வேண்டும் முதலில் ஒன்றை கூறி விட்டு பிறகு வேறொன்றை அவர் செய்யக்கூடாது. அது அவருக்கு அழகல்ல. இதனை விஜயகாந்த் உணர வேண்டும். உடனே அவர் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்று அவர் உடனே அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் தனித்தே நிற்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. எனது விருப்பமும் அதுவே. பார்ப்போம் அவர் தனித்து நிற்கிறாரா அல்லது கூட்டணி வைக்கிறாரா என்று.

10 comments:

நையாண்டி நைனா said...

hahahahahaha... Good Joke

Viji Sundararajan said...

u r right...same thought here abt Captain !
i still very much hope he wouldn't have any tie-up's..let's wait and watch..

Venkatesan P said...

நையாண்டி நைனா- vukku ennudaiya nadri.

Venkatesan P said...

hi viji, Thanks for ur comments.

Unknown said...

அவருக்கு தனித்து போட்டியிடதான் விருப்பம் இருக்கும் என்பது என் எண்ணம், ஆனால் எத்தனைகாசு செலவு என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஆனான பட்ட திமுக அதிமுக எல்லாம் கூட்டனி என்று அலையும் போது தனிமனித சம்பாத்தியத்தால் கட்சியை நடத்தமுடியும் என்று எப்படி நீங்கள் நினைக்கின்றீர்கள். விஜயகாந்தின் தேவை கட்சியை நடத்த பணம், அதற்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம் வேண்டும், அதுதான் அவரின் கூட்டணி முடிவு,

Anonymous said...

மக்களுக்குப் பயன்படும் நல்ல திட்டங்களை எதிர்கட்சியாக இருப்பினும் அதை சொல்ல வேண்டும். அவர் சொல்வதை ஆளுங்கட்சி செய்கிறதோ இல்லையோ?

சமீபத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு தன்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது என்றார். என்ன திட்டம் என்று நிருபர் கேட்டதற்கு அதை நான் இப்போது சொல்லமாட்டேன்...சொன்னால் ஆளுங்கட்சி செய்து விடும் என்கிறார். இதை என்னன்னு சொல்றதுங்கோ?

Venkatesan P said...

Hi sriram, Thanks for ur comments. Vijaykanth has already told the press that the idea was not a secret one, but to construct more power plants to satisfy the needs of people. For more than 40 yrs these two parties (DMK, ADMK) have been tamilnadu, but still they could not find a solution to satisy the growing energy needs.

Venkatesan P said...

Hi thavaneriselvan, thanks for ur views. I think money is not a matter for vijaykanth. He has more money with himself. Also he has lakhs of fans, and if he collects just Rs 100 from each one of his fan, then he could end up collecting hundreds of fans. But the idea behind his thought is about winning the election. Just because of that he is planning about the joining the other parties like congress.

Venkatesan P said...

Hi thavaneriselvan, thanks for ur views. I think money is not a matter for vijaykanth. He has more money with himself. Also he has lakhs of fans, and if he collects just Rs 100 from each one of his fan, then he could end up collecting hundreds of crores. But the idea behind his thought is about winning the election. Just because of that he is planning about the joining the other parties like congress.

Unknown said...

விஜய காந்த் தனித்து நின்றாலும் கூட்டணியா தேர்தல் களத்தை சந்தித்தாலும் அவருக்கு மட்டுமே லாபம் இதை வீட்டுக்கூட்டனி முடிவு பண்ணி ரொம்ப நாளாகிவிட்டது இப்போது அவர் அவருடைய வாக்குகளை தக்கவைக்க போடும் வேஷம்