
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கர் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருட ஆஸ்கர் விழாவை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்தது. முக்கியமாக நமது தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என்று இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் ( சிறந்த இசை), சிறந்த ஒரிஜினல் சாங் ( சிறந்த பாடலுக்காகவும் ஜெய் ஹோ) விருது அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதை பெற்ற ரகுமான் வெற்றியை தனது தாய்க்கு சமர்ப்பித்தாக தெரிவித்தார். எல்லா புகழும் இறைவனுக்கே என்று ஆஸ்கர் விருதுகள் வழங்கும் பிரம்மாண்ட அரங்கில் தமிழில் தெரிவித்தார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. படத்தின் திரைக்கதை அமைப்பாளர் சிமோன் பியூபோய் படத்தின் திரைக்கதைக்கான விருதை பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதை ரேசுல் பூக்குட்டி பெற்றுள்ளார். இவருன் , இயன் டாப் மற்றும் ரிச்சர்ட் பையர்க்கும் சவுண்ட் மிக்சி்ங்குக்காக விருதை பெற்றுள்ளனர். சிறந்த எடிட்டிங்குக்கான விருதையும் ஸ்லம்டாக் மில்லியனர் படம் தட்டி சென்றுள்ளது.

1 comment:
All the very best to A.R.Rahman. I wish him all success in future to come.
Post a Comment