
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்னும் சில மணிநேரங்களில் நடைபெற இருக்கிறது. ஒரு இந்தியனாக ஒவ்வொரு வருடமும் இந்த விழாவை நாம் அவ்வளாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் இந்த வருடம் நாம் இந்த விழாவை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். அதற்கு காரணம் நம் இந்திய (தமிழக) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இந்த வருடம் வெளிவந்திருக்கும் (ஸ்லம்டாக் மில்லினைர்) என்ற ஆங்கில படம்.

நம் இந்திய மக்களுக்கு அவருடைய திறமையைப் பற்றி நன்கு தெரியும். நம்முடைய உலகநாயகன் கமல்ஹாசன் சொன்னது போல ஆஸ்கர் விருது என்பது இந்திய தேசிய விருது போலத்தான். அதனால் விருது கிடைக்கவில்லையென்றால் அதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. எது எப்படியோ நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நம்முடைய மனதார வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment