Thursday, February 19, 2009

தமிழனின் கடமை

நான் சமீபத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படித்தேன். நான் இதுவரைபடித்த நூல்களிலேயே மிக சிறந்த நூல். நூலை படிக்கும் பொழுது பல இடங்களில் அழுதேன். பேயத்தேவர் மற்றும் மொக்கராசுவின் பாத்திர படைப்பு மிக அருமை. ஒரு நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து அதே நாட்டில் உள்ள வேறொரு கிராமத்திற்கு புலம் பெயரும் மனிதர்களின் மனநிலையை மிக உருக்கமாக விளக்குகிறார். உள்நாட்டிலேயே புலம் பெயரும் மனிதர்களின் மனநிலையேஅவ்வளவு கடினமானதாக இருக்குமானால் நாடு விட்டு நாடு புலம் பெயரும் மனிதர்களின் மனநிலை எவ்வளவு கடினமானதாக இருக்க வேண்டும். நெஞ்சில் நேசம் இருக்கிற அனைவருக்கும் அந்த வலி புரியும்.

இலங்கையில் நடக்கின்ற கொடுமையை பார்க்கின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் நாடு விட்டு நாடு புலம் பெயரும் ஈழ தமிழனின் வலி புரிய வேண்டும். அந்த வலியை புரிநது கொள்ள முடியாதவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன். ஏன் மனிதனாக இருக்கவே தகுதியற்றவன். ஒவ்வொரு தமிழனும் மற்றவர்களின் கஷ்டங்களை புரிநது கொண்டு அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். இதை உங்கள் கடமை என்று நீங்கள் உணர வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ஈழ தமிழனும் நம் சகோதரன்.

கள்ளிகாட்டு இதிகாசத்தை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு ஈழ தமிழனின் மனநிலை நமக்கு இன்னும் ஆழமாக புரிய வரும். நூலின் விலை நூற்று பத்து ரூபாய் தான்.

1 comment:

Jagan said...

Exactly what you are telling is the true one.Nowadays people(little group) are thinking only in narrow mind.They should think in broad and help them. There is no point in living life without joy.When we do things better in life automatically joyful will come to our mind.