Monday, February 23, 2009

மொழி


அன்புக்குரியவனே!

என்றேனும் உன் மொழிக்கும் உனக்குமுள்ள உறவைப் பற்றிச்
சிறிது நேரமாவது சிந்தித்திருக்கிறாயா?

உடம்பை உயிர் இயக்குவது மாதிரி, நம் நடைமுறை
வாழ்க்கையை
மொழிதான் இயக்குகிறது என்ற உண்மையை
ஒரு போதேனும்
நீ உணர்ந்திருக்கிறாயா?

என்னதான் அறிவைத் துருவித் துருவிப் பார்த்தாலும் மொழி ஒரு கருவிதான் என்று அத்தனை எளிதாக அதைத் தள்ளி
வைத்துவிட முடியாது

ஏனென்றால் தொட்டில் முதல் பாடை வரைக்கும் மொழி நமது சமுதாய வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதனின் பிறப்பைப் போலவே அவனது தாய்
மொழியும் தற்செயலானது என்பது ஒப்புக்கொள்ளப்பட
வேண்டிய உண்மையே.

ஆனால் பிறந்த பிறகு ஒரு மனிதன் தன்னைத்தானே நேசிப்பது மாதிரி தன் தாய்மொழியையும் நேசிப்பதே நியாயம் என்றே
வாழ்நாள் முழுவதும் நான் வலியுறுத்திக் கொண்டிருப்பேன்.

ஏனென்றால், உணவு, ஒரு மனிதனின் சதையை வளர்க்கிறது;
மொழி ஒரு மனிதனின் அறிவை வளர்க்கிறது.

அறிவை மொழிதான் கற்றுத் தருகிறது.

அந்த அறிவுதான் ஒருவனுக்கு மனிதன் என்ற மரியாதையைப்
பெற்றுத் தருகிறது.

எனவே மொழிக்கு நீ காட்டும் நன்றிதான் - மொழிப்பற்று.

நாம் மொழிப்பற்றோடு இருக்க வேண்டும் என்று முழங்கிக்
கொண்டிருப்பதே நாம் நன்றியற்றவர்களாக இருக்கிறோம்
என்பதை நாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நான் தமிழ்தான் மொழிப்பற்று என்று சொல்லவில்லை.

தாய்மொழியாக எந்த மொழியைக் கொண்டவரும் அந்த
மொழியை நேசிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

மொழிதான் ஞானம்; மொழிப்பற்று என்பது மானம்.

1 comment:

Anonymous said...

U r absolutely correct. We should love our mother language. But its shame that most of the educated guys feel shame to speak tamil even to their friends.