Thursday, April 2, 2009

உங்கள் ஒட்டு கேப்டன் விஜயகாந்திற்கு!


நான் ஏற்கனவே சொன்னது போல விஜயகாந்த் இந்த தேர்தலில் தனித்தே களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வேறு யாராவது இந்த தேர்தலில் தனித்து நிற்கிறார்களா?. இல்லை. ஏன்?. ஏனென்றால் அவர்களுக்கு பயம். தனியாக நின்றால் தோற்றுவிடுவோமோ என்ற பயம். இத்தனை வருடங்கள் திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தார்களே, இன்னும் ஏன் அவர்களுக்கு தனியாக நிற்க தைரியம் வரவில்லை. அவர்களுக்கே தெரியும் அவர்கள் மக்களாட்சி செய்யவில்லை என்று.

கருணாநிதி மக்களாட்சி என்பதை தன் மக்களுக்கு (குடும்பம்) செய்ய வேண்டிய ஆட்சி என்று நினைத்து விட்டார். அதனால் தான் இன்று பல கோடிகளுக்கு அதிபராகி விட்டார். முதல்வன் படத்தில் வருவது போல கருணாநிதி அரசியலில் நுழையும் பொது எவ்வளவு ரூபாய் வைத்து இருந்திருப்பார். மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ரூபாய் வைத்து இருந்திருப்பாரா? (இதுவே அதிகம் என்று நினைக்கிறேன்.). ஆனால் இன்று எத்தனை கோடிகள் வைத்திருப்பார். ஒரு பத்தாயிரம் கோடிகள். இல்லை மேலும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். கருணாநிதி எவ்வளவு பணம் வைத்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. ஏனென்றால் தினமும் அவர் கஜானாவில் கோடிக்கணக்கில் பணம் ஏறிக்கொண்டேயிருக்கும். எல்லாம் மக்களின் வரிப்பணம். அரசாங்கமே அவர் கையில் இருக்கிறதல்லவா. அரசாங்கத்தை அவர் கையில் கொடுத்தது மக்கள் தானே. அதற்கான பலன் தான் இது. நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறது?. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு. (For every action, there is an equal and opposite reaction) அதைத்தான் இன்று தமிழக மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது ஜெயலலிதா (இவரை அம்மா என்று அதிமுகவினர் அன்போடு அழைப்பார்களாம்.என்ன கொடுமை சரவணன் இது). யாரை அம்மா என்று சொல்ல வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் தனியாக பாடம் எடுக்க வேண்டும். அவர் மேல் எத்தனை ஊழல் வழக்குகள். என்னால் என்ன முடியவில்லை. ஆனால் எனக்கு ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். ஆணாதிக்கம் மிக்க அரசியலில் தன்னாலும் கொள்ளையடிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார். எவ்வளவு வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன், நான் கொள்ளையடித்து கொண்டே இருப்பேன் என்ற அந்த தைரியம் தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது.


அடுத்தது நம் ராமதாஸ் (இவரை கொய்யா ஸாரி அய்யா என்று கூப்பிடுவார்கள்). நம் விஜயகாந்த் சொன்னது மாதிரி இவர் ஐந்து வருடம் வேஷ்டியைத் துவைப்பார். இன்னொரு ஐந்து வருடம் சேலையைத் துவைப்பார். போன ஜென்மத்தில் டோபியாக (மற்றவர்களின் துணிகளைத் துவைப்பவர்கள்) பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன். (டோபிகளை தவறாக நினைக்கிறேன் என்று யாரும் என்னை நினைக்க வேண்டாம். அவர்களின் மேல் எனக்கு மிகுந்த அன்பு உள்ளது). இவர் கடைசி நிமிடம் வரைக்கும் காங்கிரஸில் இருந்து விட்டு (மகன் அன்புமணியின் பதவிக்காக மற்றும் மக்கள் டிவியின் அரசாங்க விளம்பிரத்திற்கு) பதவிக்காலம் முடிய இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு சகோதரி (ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தத்து எடுத்து விடுகிறார்) ஜெயலலிதாவின் சேலையைத் துவைக்க கிளம்பி விட்டார். இவருக்கு இதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு பேசாம ....... கட்.கட்..வேண்டாம்... அதற்கு மேல் என் வாயில் நல்ல வார்த்தைகள் இல்லை.


அடுத்தது கேப்டன். விஜயகாந்தை விஜயகாந்த் என்று சொல்வதை விட அவரை கேப்டன் என்று சொல்வதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு அந்த பெயர் மிக பொருத்தமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அவர் நடிகனாக ஆரம்பித்து, அவர் பின்னாடி இன்று இவ்வளவு லட்சக்கணக்கான ரசிகர்கள் சேர்ந்தது வரை அவருடைய உழைப்பு எவ்வளவு இருந்திருக்கும். அவர் இருக்கும் உருவத்திற்கு அவர் நடிகனாக நுழைந்ததே பெரிய விஷயம். இன்று வரை நீடித்து நிற்பது அதை விட பெரிய விஷயம். லட்சக்கணக்கான ரசிகர்களை இவ்வளவு கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் அவரை கேப்டன் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

நின்ற முதல் சட்டசபைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் பதினைந்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். எப்படி?. மக்கள் அவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அவர் மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் தான் இன்று வரை தனித்தே நிற்கிறார். அவர் நினைத்திருந்தால் பல கோடிகளைப் பெட்டியில் வாங்கிக் கொண்டு போயிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தார். இவ்வளவு காலம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டோம். ஒரு மயிரும் நடக்கவில்லை. ஒரு தடவை கேப்டன் விஜயகாந்திற்கு போடுவோம். என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.


பின்குறிப்பு:

யார் மனதாவது புண்படும்படி எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும் (ஹி.ஹி. ஹி.).

20 comments:

Anonymous said...

கன்னாபின்னா ரிபீட்டேய்...

தனியே நிற்பதற்க்காக கேப்டனுக்கு தனி ராயல் சல்யூட்... அண்ட் ஹேட்ஸ் ஆஃப்... மத்தவ்னுக்கெல்லாம் ஆப்பு..

வடிவேல் said...

ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்படக்கூடிய வாய்ப்பை நீங்கள் இலங்கை பிரச்சனையில் இழந்து விட்டீர்கள், அதான் நாங்க கருப்பு கொடி குத்திகிட்டோமே, என் பையனுக்கு பிரபாகரன்னு பெயர் வச்சோமேன்னு சொல்றிங்க.. உங்களின் பூர்வீகம் தெலுங்காக இருக்கலாம், உங்களை நாங்கள் அப்படி பிரித்து பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் அத்தனை பெரும் எங்களை பொறுத்தவரை தமிழன்தான். ரொம்ப நாளா பிறந்த நாள் கொண்டாடாம இருக்கீங்க, இப்படி தமிழ்நாட்டுல எல்லாரும் பிறந்தநாள கொண்டாடாம இருந்த சீக்கிரமா ஈழம் கிடைச்சிடும், ஆனால் உங்க அளவுக்கு எங்களுக்கு தெளிவில்ல, அதனால்தான் பொழப்பு இல்லாம போராட்டம் பண்றோம்.

உங்க திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதே உங்கள் மக்கள் பற்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பவே என் திருமண மண்டபத்தின் இடம் மக்களுக்கு தேவை என்றால் அதனை நான் இலவசமாகவே வழங்குகிறேன் என்று அறிவித்திருந்தால், நீங்கள் எங்கள் மனதில் ஆழமாக இடம்பெற்று இருப்பீர்கள். ஆனால் இன்றுவரை அதே பொலப்பம்தான். என்னோட மண்டபத்த இடிச்சிட்டாங்க என்னை பழிவாங்கிட்டாங்கன்னு எல்லா கூட்டத்துலயும் சொல்றீங்க. நீங்க எப்படி பொதுநலன் பத்தி பேசுறிங்க? அத நாங்க வேற நம்பனுன்னு நெனைக்கிறீங்க.

Anonymous said...

தமிழகத்தை சில பல ஆண்டுகள் காங்கிரஸ்,மற்றும் தி.மு.க,அ.தி.மு.க,கட்சிகள் ஆண்டு வந்தாலும் இதில் எந்த கட்சியும் தனித்து போட்டியிடுவதிற்கு தைரியமில்லை.என்ன கொடுமை இவர்களும் பணம் சம்பாதிக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது தேவைப்பட்டால் கூட்டணி வைத்து மார் தட்டி கொள்கிறார்கள்...ஆனால் விஜயகாந்த் தைரியம் எந்த அரசியல்வாதிக்கு வரும்...வாழ்க கேப்டன்..உங்கள் ஆதரவு கேப்டனுக்கே...

Venkatesan P said...

ஹாய் வடிவேலு,

உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. இருப்பினும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திமுகவிற்கு உண்மையிலேயே மக்களின் மேல் அக்கறை இருந்திருந்தால் எவ்வளவோ நல்லது செய்து இருக்கலாம். ஆனால் அவர்கள் விஜயகாந்தின் மண்டபத்தை இடித்தது அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டத்தான். சென்னை பாடியிலும் ஒரு பாலம் கட்டினார்கள். அங்கேயும் பக்கத்தில் ஒரு திருமண மண்டபம் இருந்தது. ஆனால் அதை இடிக்கவில்லை. காரணம் மண்டபத்தின் உரிமையாளர் ஒரு முக்கிய திமுக புள்ளி. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அவரது வீட்டில் சோதனை (லஞ்ச ஒழிப்பு) போட்டார்கள். பொறம்போக்கு நிலத்தை அபகரித்தார் என்று சொன்னார்கள். ஆனால் கேப்டன் எதற்கும் அசரவில்லை. காரணம் அவர் மடியில் கனமில்லை. அதனால் அவருக்கு பயமுமில்லை. இதுதான் உண்மை.

Anonymous said...

yaarudanum kootani vaikadhapodhu panrutti yane delhi odinaar.

potti vaangitu vote pirikiraar. idhule vetti bandhaa.

தத்து பித்து said...

வடிவேல் அவர்களுக்கு,
இலவசம் இலவசம் என்று மக்களை அடிமையாக்கி ஆண்டுவரும் ஒரு கூட்டம் ,,,ஆட்சி,அதிகாரத்தை மட்டுமே குறீக்கோளாக கொண்ட அராஜக கூட்டம்..இவர்கள் தரும் கூலிக்காக மாறி மாறி குனிந்து நிற்கும் கூட்டம் ,,,இவர்களில் யாருக்கு ஓட்டு போட சொல்கிறீர்கள்...இவர்களை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல்...

வடிவேல் said...

வடிவேலு பிரச்சினை, வடிவேலே உங்க ஆளுங்ககிட்டே பிரச்சினை பண்ணியிருந்தால் கூட நீங்க நேரா போய் வடிவேலுகிட்டே பேசி இருந்தா உங்கள தூக்கி வச்சி கொண்டாடி இருப்போம். நீங்களோ சும்மா இருந்திட்டிங்க, அத சரியா பயன்படுத்திக்கிட்டு வடிவேல ஆளும்கட்சி தூண்டிவிட்டப்ப கூட போய் பேசி இருக்கணும், தவற விட்டுட்டீங்க...
ஆந்திராவில் உங்களுக்கு பின்னாடி கட்சி ஆரம்பிச்ச சிரஞ்சீவிக்கு இருக்கிற துணிச்சல்ல பாதியாவது உங்ககிட்டே இருக்கா, உங்க வீரமெல்லாம் சினிமாவுக்கு மட்டுந்தானா?
இப்ப பிரச்சனை என்னன்னா இப்படி நீங்க ஈழ பிரச்சனையில் திடீரென காட்டும் அக்கறை, கொஞ்சம் ஜெயலலிதாவுக்கு முன்னாடி காட்டியிருந்தால் கூட, அட இவருக்கும் நடிக்க வருதுப்பான்னு சந்தோசப்பட்டிருப்போம்.

ஆனா நீங்க நல்லது செய்வீங்கன்னு மாபா பாண்டியராஜன் கூட நம்புராரு பாருங்க, அவர நெனச்சாதான் வருத்தமா இருக்கு. ஜோசியக்காரனையும், சாமியாரையும் நம்பி களத்தில நிக்கிறீங்க.

தத்து பித்து said...

இவ்வளவு காலம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டோம். ஒரு மயிரும் நடக்கவில்லை. ஒரு தடவை கேப்டன் விஜயகாந்திற்கு போடுவோம். என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.அட ஆட்சியில் வைத்துதான் பாருங்களேன்,,

கடைக்குட்டி said...

இங்க இருக்கறது மொத்தம் ரெண்டு வகையான ஓட்டு.. ஆளும் கட்சிக்கு போடும் ஓடு.. போடாத ஓட்டு...

இதில் ஆளும் கட்சிக்கு போடாத வோட்டை பிரிக்க ஜெ. உள்ளார்.. இதில்.. நம்ம கேப்டனும் ( என்ன சந்தோசமா?? கேப்டன்னுதான் சொன்னேன்.. பேரக்கூட சொல்லல..)
பிரிப்பார்.. அதனால் யாருக்கும் இந்த தேர்தலில் பயன் ஏற்படப்போவதில்லை... அடுத்த சட்டமன்ற தேர்தலில் அவரது புலி பாய்ச்சலுக்கு வேண்டுமானால் இது அடி போடக்கூடும்..

Viji Sundararajan said...

i am sure Captain will rock !!!

Anonymous said...

வெற்றி கருப்பு எம்.ஜி.ஆருக்கே

Anonymous said...

குடும்ப அரசியலுக்கு மாற்று என்ற கோஷத்தோடு களமிறங்கிய விஜயகாந்த் தன் மச்சானுக்கு குடியாத்தம் சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்தார். குடியாத்தத்தில் பிரச்சாரம் செய்யும்போதே 'குடும்ப அரசியலை வேரறுப்போம்' என்று வி.காந்த் தன் மனைவி பிரேமலதா சகிதம் முழக்கமிட்டது மறக்கமுடியாத காமெடி.


விஜயகாந்த் ரசிகர்மன்றத்தில் பலவருடங்கள் இருந்த ராமுவசந்த், இரா.வேணு போன்றவர்கள் குடும்ப அரசியல் என்று காரணம் காட்டி சரத்குமாரிடம் சென்று இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* நாற்பதாண்டுகளாக தமிழகத்தில் இருந்த அரசியல் வியாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்று கருத்து தெரிவித்த விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும், எம்.ஜி.ஆர் ஆட்சி அமைக்கப் போவதாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டார். நாற்பது ஆண்டுகளுக்குள் எம்.ஜி.ஆரின் பத்து ஆண்டு கால ஆட்சியும் உள்ளடக்கம் என்பதை அவர் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

* தான் கட்டிய கல்லூரிகளுக்கு பிரச்சினை வரும் என்ற நிலையில் அதுவரை சந்திக்காத ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அதுபோலவே தன் கல்யாண மண்டபம் இடிக்கப்படப் போகிறது என்று தெரிந்ததுமே கலைஞரை 'மரியாதை நிமித்தமாக' சந்தித்தார். சினிமாவில் சம்பாதித்ததை விட கல்லூரிகள் மூலமாக பன்மடங்கு விஜயகாந்த் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் நேர்மையாக கல்லூரி நடத்துவது என்பது சாத்தியமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

* திமுக, அதிமுக இருகட்சிகளுமே ஊழல்கட்சிகள். தமிழகத்தில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளுமே ஊழல்வாதிகள். புதியவர்களான எங்களை தேர்ந்தெடுங்கள் என்று உள்ளாட்சித் தேர்தலின் போது பிரச்சாரம் செய்த விஜயகாந்தின் கட்சியின் இன்றைய முக்கியஸ்தர்கள் பெரும்பாலோனோர் பண்ரூட்டி, கு.ப.கி., சி.ஆர்.பாஸ்கர் போன்று விஜயகாந்த் விமர்சித்த மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களே.

* திமுக, அதிமுக கட்சிகளுக்காவது கொள்கை என்ற பெயரில் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர் கூட 'அண்ணாயிசம்' என்ற பெயரில் தனக்கு கொள்கைகள் இருப்பதாக அறிவித்திருந்தார். விஜயகாந்தோ கொள்கை கிலோ என்னவிலை? என்ற ரேஞ்சிலேயே இன்னமும் இருக்கிறார்.

* ஒரு அரசியல்வாதிக்கு தேவை சகிப்புத்தன்மை. ஆக்ஷன் ஹீரோ வேண்டுமானால் பொது இடங்களில் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வேறு ஒரு சம்பவத்தின் போதும் தன் கட்சிப் பிரமுகர்களையே நாக்கை துருத்தி விஜயகாந்த் ஓங்கி அறைந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

* நான் ஆட்சிக்கு வந்தால் வீடு தேடி ரேஷன் வரும் என்றெல்லாம் வாக்களித்து கடைசியாக தன்னந்தனியாக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு போனவர் இதுவரை விருத்தாசலத்துக்கு எத்தனை முறை போயிருக்கிறார்? சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாவது அவருக்கு தொகுதியில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி.

* என் கல்யாண மண்டபத்தை இடிக்க சதி செய்கிறார்கள் என்று முதலில் புலம்பியவர், பின்னர் மக்களுக்காக என் சொத்தை இழக்கத் தயார் என்று அறிவித்தார். அறிவித்த சூட்டோடு சூட்டாக நீதிமன்றத்துக்கு சென்று கல்யாண மண்டபத்தை இடிக்க தடை கோரினார்.

* தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே மக்களை சந்திப்பது என்றொரு கொள்கை வைத்திருக்கிறாரோ, என்னமோ தெரியவில்லை. தேர்தல் முடிந்ததுமே ஷூட்டிங் செல்லத் தெரிகிறது. ஒரு அரசியல் தலைவனின் லட்சணத்துடன் பொதுக்கூட்டங்கள் வாயிலாக கூட மக்களை சந்திக்கத் தெரியவில்லை.

* ஈழம் குறித்த நிலைப்பாடு தவிர்த்து மற்ற எந்தப் பிரச்சினைகளிலும் அவருடைய நிலைப்பாடு என்னவென்பது தேமுதிகவினருக்கு கூட தெரியாது. . இந்தி எதிர்ப்பு - இந்தி திணிப்பு இதற்கு கூட விஜயகாந்துக்கு வித்தியாசம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

* இவர் ஆட்சிக்கு வருவாரா மாட்டாரா என்பது கூட தெரியாத நிலையில் நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று தேமுதிகவினர் செய்துவருகிறார்கள். அது சரி, தலைவரே நில ஆக்கிரமிப்பு செய்யும்போது தொண்டர்கள் செய்வதற்கென்ன?

விஜயகாந்திற்கு தான் மட்டுமே தமிழன் போலவும் நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவிலிருந்து ஒடி வந்தவர்கள் போல எப்போதும் ஒரு உளறல்..

கெட்ட பழக்ககங்களின் மொத்த உருவம் தான் விஜயகாந்த்... குடிகாரன்.. கல்வியை வியாபாரக்கியவ்ன்.. { ஆண்டாள் அழகர் கல்லூரி}

ஊழல் பெருச்சாளி பண்ருட்டி ராமச்சந்திரனை வைத்துக்கொண்டு ஏதேதோ உள்றுகிறான்..

இனவென்லாம் நாட்டை காப்பாத்த போகிறானா..??

Anonymous said...

நான் எழுத நினைத்ததை என் அண்ணன் (நன்றி: அனானிமஸ்) எழுதி விட்டார். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்குதான் வரவேண்டும் என்பதில்லை. பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று சொல்லிவிட்டு முதலில் பிரசாரத்தை தொடங்கிய வேசதாரி! பிரசார கூட்டங்களில் காங்கிரசை பழிக்காதது ஏன் ? விளக்க முடியுமா நண்பரே ? சவுதியில் இருந்து ஒரு பாவப்பட்ட தமிழன்.

Anonymous said...

I THINK VIJAYKANTH IS THE ONLY TRUE ALTERNATIVE FOR DMK/ADMK - LET US BRING THE CHANGE !!! VOTE FOR CAPTAIN !!!

Anonymous said...

ஏப்ரல் 2ம்தேதியிட்ட பதிவா இது..?? முதல் தேதி இட்டிருந்தால் மிகவும் சரியாக இருந்திருக்கும்.

தமிழனை நமீதா Sorry.. பிரேமலதா செருப்பால அடித்தாலும் திருந்த மாட்டான்.

Anonymous said...

hey this is absolutely rite.. captain aim edhuvenumalum irukatum.. but thaniya election la poti podararu illa, adhuke avara naama solute pannanum..

Anonymous said...

விஜயகாந்தை வைத்து காமெடி பண்ணுகிறார் பதிவாளர். நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்ள சொல்கிறார்.

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Skip Laggin Downloads With NZB Files You Can Easily Search Movies, Console Games, MP3 Singles, Software & Download Them at Flying Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Usenet[/B][/URL]

Anonymous said...

top [url=http://www.c-online-casino.co.uk/]free casino bonus[/url] check the latest [url=http://www.realcazinoz.com/]free casino games[/url] autonomous no consign bonus at the chief [url=http://www.baywatchcasino.com/]free hand-out casino
[/url].

Anonymous said...

[url=http://www.realcazinoz.com]casinos online[/url], also known as accepted casinos or Internet casinos, are online versions of well-known ("crony and mortar") casinos. Online casinos approve gamblers to ambitiousness and wager on casino games to a t the Internet.
Online casinos superficially mount aside on the trade odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos contend higher payback percentages in the accomplishment of percentage gismo games, and some promulgate payout serving audits on their websites. Assuming that the online casino is using an correctly programmed non-specific consolidate up generator, proffer games like blackjack clothed an established overcome edge. The payout slice as a replacement pro these games are established to the insignificant the rules of the game.
Uncountable online casinos sublease or advantage their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Supranational Scheme Technology and CryptoLogic Inc.