Wednesday, April 8, 2009

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால்!

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. ஒரு விஷயத்தைப் பற்றி அலசாமலேயே வெறும் தலைப்பைக் கொடுத்துவிட்டு நம்முடைய பிளாக் நண்பர்களின் கருத்தை அறிய வேண்டும் என்று. என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்ததுதான் மேலே சொன்ன தலைப்பு.

சரி விஷயத்திற்கு வருவோம். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது இரண்டும் எதிரி நாடாக இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இரண்டு நாடுகளும் மறுபடியும் சேருவது என்பது நடக்கக் கூடிய காரியமா?. ஒருவேளை அப்படி இரு நாடுகளும் சேர்ந்தால் அது இந்தியாவுக்கு லாபமா அல்லது நஷ்டமா?. அல்லது பாகிஸ்தானுக்கு அது லாபமா இல்லை நஷ்டமா?. இதனால் இரு நாடுகளும் பயனடையுமா?. இதற்கெல்லாம் என்னிடம் தெளிவான பதில் இல்லை. அதனால் வாசகர்களாகிய நீங்கள் தான் என்னுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

3 comments:

ராஜ நடராஜன் said...

விளையாட்டுக்கு இன்னும் ஒருத்தரும் வரல போலிருக்கு:)

ராஜ நடராஜன் said...

அப்ப ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!நானும் ரொம்ப நாளா இதுபற்றி யோசித்துள்ளேன்.ரெண்டு பயலுகளும் வீணா எதுக்கு காசை செலவு பண்ணி அமெரிக்க சினிமா படங்கள் மாதிரி நியுக்ளியர் சண்டை போட ஆசைப் படுறாங்களோன்னு.மனிதவளம் நிரம்பிக் கிடப்பதை மக்கள் மேம்பாட்டுக்கு செலவு செய்யலாமேன்னு.இதில் பிரச்சினை என்னன்னா இந்தியாக்காரனை ஃப்ரியா யோசின்னு சுதந்திரமா விட்டுட்டதால அட இது கூட நல்லாவே இருக்குதுன்னு நினைப்பான்.பாகிஸ்தான் தலிபான் வழி என்வழின்னு போயிட்டதால இணைந்து கொள்ளலாம் நினைப்பே இல்லாமல் போய்விட்டது துரதிஷ்டம்.

DHANS said...

muthalla tamilnaatayum karnatakavaiyuminaikka paarungal appuram pakistan pathi paakalaam.

oorukkkullaye olunga illama adichukaraanga...