Monday, April 6, 2009

அயன் - திரைவிமர்சனம்

இரண்டு நாட்களுக்கு முன்பே அயன் திரைப்படத்தை சென்னை சைதாபேட்டை ராஜ் தியேட்டரில் பார்த்து விட்டேன். ஆனால் இன்று தான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. சரி கதைக்கு வருவோம்.

பிரபு கள்ளக்கடத்தல் செய்யும் ஆசாமி. சூர்யா அவரிடம் வேலை பார்க்கிறார். சூர்யாவின் அப்பாவும் பிரபுவிடம் வேலை பார்த்தவர்தான். அவரை எதிரிகள் கொன்று விடுகிறார்கள். அதனால் சூர்யாவும் பிரபுவிடம் வேலை பார்ப்பது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. எங்கே தன் மகனுக்கும் தன் கணவனின் கதி வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். ஆனால் சூர்யா பிரபுவிடமே வேலை செய்கிறார். சூர்யா அழகாய் இருக்கிறார். அதேபோல் தமன்னாவும்.

காங்கோவில் சூர்யா வைரம் கடத்தும் போது அதை எதிரிகள் பறித்து விட்டு ஓடும் போது வரும் சண்டை காட்சிகளை மிக அருமையாய் எடுத்து இருக்கிறார்கள். அது ஏதோ ஒரு ஆங்கில படத்தில் வரும் சண்டை காட்சியாம். இருந்தாலும் அருமையாய் இருக்கிறது. வில்லனின் அடியாளாக வரும் விஜய் டிவி நண்டு சூர்யாவிடம் சேர்ந்து வில்லனுக்காக வேவு பார்க்கிறார். அவரது தங்கைதான் தமன்னா. ஆனால் அண்ணன் நண்டுவை மாமா ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறார்கள். தங்கையை ஐட்டம் என்று சொல்கிறார். அதனைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி நண்டு நன்றாக நடித்திருக்கிறார்.

வில்லன் தமிழ் சினிமாவிற்கு புதுசு. நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேறனும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வயிற்றில் வைத்து போதை மருந்து கடத்துவதும், அதனை வயிற்றைக் கிழித்து வெளியே எடுப்பதும் நெஞ்சைப் பிழியும் உண்மைகள். கள்ளக்கடத்தல் சூர்யாவை வைத்தே கள்ளக்கடத்தல்காரர்களை பிடிக்கும் வேலையை கட்சிதமாக செய்கிறார் பொன்வண்ணன். கடைசியில் சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் ஆபீஸில் வேலை போட்டுக் கொடுப்பது கமர்ஷியல் சினிமா.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. எம். எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. இயக்குனர் கே.வி. ஆனந்த் படத்தை ஜாலியாக இயற்றியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் போகும் என்று பார்த்தால் கொஞ்சம் ஆமை வேகத்தில் போகிறது. அதனைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். அவரின் முதல் படமான கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படம் பின்பாதியில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். மற்றபடி சூர்யா பிரமாதபடுத்தியிருக்கிறார். சூர்யாவின் மானரிசம் ஒவ்வொரு படத்திலும் நல்ல வித்தியாசம். படத்தை ஜாலியாக ஒருமுறை பார்க்கலாம்.

5 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல நேர்த்தியான விமரிசனம் !

குமரன் said...

படம் வணிகரீதியாக ஜெயிக்கும்! படத்தில் அதற்கான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன!

இப்பொழுதெல்லாம், இயக்குநர்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நடன இயக்குநர்கள், சண்டை இயக்குநர்கள், கேமராமேன்கள் எல்லாம் படங்களை இயக்குகிறார்கள்!

இந்த படத்தில் எனக்கென்ன கேள்வி என்றால்... அரசாங்கத்துக்கு எதிரான இந்த கடத்தல் வேலையை, அதுவும் எம்.எஸ்.சி. கணிப்பொறி அறிவியல் படித்த நாயகன், கடைசி வரை எந்தவித உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்! இது தமிழ் சினிமாவுக்கு புதுசு!

Muruganandan M.K. said...

பாரக்கக் கிடைக்கவில்லை. நல்ல விமர்சனம்.

பழூர் கார்த்தி said...

:-)

Anonymous said...

nice review machi... if u have time read my review www.nee-kelen.blogspot.com. bye