எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. ஒரு விஷயத்தைப் பற்றி அலசாமலேயே வெறும் தலைப்பைக் கொடுத்துவிட்டு நம்முடைய பிளாக் நண்பர்களின் கருத்தை அறிய வேண்டும் என்று. என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்ததுதான் மேலே சொன்ன தலைப்பு.சரி விஷயத்திற்கு வருவோம். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது இரண்டும் எதிரி நாடாக இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இரண்டு நாடுகளும் மறுபடியும் சேருவது என்பது நடக்கக் கூடிய காரியமா?. ஒருவேளை அப்படி இரு நாடுகளும் சேர்ந்தால் அது இந்தியாவுக்கு லாபமா அல்லது நஷ்டமா?. அல்லது பாகிஸ்தானுக்கு அது லாபமா இல்லை நஷ்டமா?. இதனால் இரு நாடுகளும் பயனடையுமா?. இதற்கெல்லாம் என்னிடம் தெளிவான பதில் இல்லை. அதனால் வாசகர்களாகிய நீங்கள் தான் என்னுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.