Showing posts with label பதிவு.. Show all posts
Showing posts with label பதிவு.. Show all posts

Tuesday, June 9, 2009

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்...


வணக்கத்திற்குரிய வாசகர்களே,

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் பதிவு எழுத தோன்றியது. என்னையும் ஒரு பதிவாளனாக கருதி என் பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் என் நன்றி. நான் ஒரு புத்தகம் எழுதும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் என்னால் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பதிவெழுத முடிவதில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனி பதிவு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியிட்ட என் பதிவைப் (புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையா?) பார்த்து ஒரு வாசகர், அந்த பதிவு தன்னையும் எழுத தூண்டியதாக கூறியதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படி என்னுடைய எழுத்தும் ஒருவருக்கு உபயோகமாக இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். கண்டிப்பாக மிக அதிகமான நண்பர்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே போல அவர்களுக்கு கலையார்வமும் கண்டிப்பாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். காரணம், வலையில் பதிவு எழுத நேரம் ஒதுக்கும் உங்களால் கண்டிப்பாக அதன் அனுபவத்திலிருந்து ஒரு புத்தகம் எழுத முடியும் என்று எண்ணுகிறேன். அது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் கருத்து.

ஆல் தி பெஸ்ட்....